அடேய்! பாவிகளா!!
முட்டாப்பய பிள்ளைகளா!!!
அவசரப்பட்டு, பெசண்ட் நகர், மின்சார மயானத்தில், கலைஞர் உடல் தகனம்.
அப்படியெல்லாம் செஞ்சு தொலைச்சுடாதீங்க.
நிதானமாக செயல் ஆற்றுங்கள்.
அன்னைக்கே, கருணாநிதி என்கிட்டே சொன்னாரு.
அது, கருணாநிதியோட வனவாச காலம். பதின் மூன்று ஆண்டுகள், ஆட்சி பொறுப்பில் இல்லாத காலம். அந்த காலகட்டத்தில்தான், கருணாநிதி, தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திய காலம்.
அந்த காலகட்டத்தில், காலையும், மாலையும், மவுண்ட் ரோட்டில், அவர், பார்த்து பார்த்து கட்டிய, அறிவாலத்தை வலம் வருவார்.
அப்பத்தான், கருணாநிதி, என்னிடம் சொன்னார்.
"பாருங்க தம்பீ, மவுண்ட் ரோட்டிலே, இவ்வளவு பெரிய கட்டிடம் கட்டி வைச்சிருக்கேன். யாரும், குடி வர மாட்டேங்கிறாங்க."
"ஏன்", என்று வினாவினேன்.
கருணாநிதி பதில் சொல்லவில்லை. ஆனால், அவரது அமைதி, எனக்கு விடை அளித்தது.
"யாரும், வாடகைக்கு வரலைன்னா, என்ன பண்ணுவீங்க."
"என்ன பண்றது. என் கல்லறையை இங்க கட்ட வேண்டியது தான்."
கலைஞர் கருணாநிதியின் வாக்கு, மெய்ப்பட வேண்டும்.
ஆலயம். அது ஓர் ஆலயம்.
கருணாநிதிக்கு, மவுண்ட் ரோட்டில், ஆலயம் அமையட்டும்.
அப்படியே, ராஜாஜி ஹாலில் இருந்து, தோளிலே தூக்கிட்டு வாங்க.
நாலு பேர், நாலு பேரா மாத்தி மாத்தி, தோளிலே தூக்கிட்டு, அண்ணா அறிவு ஆலயம் வாங்க.
கருணாநிதிக்கு, மவுண்ட் ரோட்டில் ஆலயம் அமையட்டும்.
அன்றைய காலகட்டத்தில், திமு கழக கட்சி, நந்தனத்தில் செயல்பட்டது.
முரசொலி, சன் தொலைக்காட்சி, கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே செயல்பட்டது.
அண்ணா அறிவு ஆலயத்தில், ஒரே ஒரு ஆள், துணிச்சலாக வந்து, கம்ப்யூட்டர் பயிற்சி மையம் தொடங்கினார். வெங்கடாஜுலு என்ற முந்திரி ஏற்றுமதி தொழில் அதிபர். கலைஞருக்கு நண்பர். அவர், சோழமண்டலம் மென்பொருள் வைரவன் ஆலோசனையின்படி, கம்ப்யூட்டர் பயிற்சி மையம், அண்ணா அறிவாலயத்தில் தொடங்கினார்.
அந்த சமயத்தில், நான் அடிக்கடி அண்ணா அறிவாலத்துக்கு, தொழில் நிமித்தமாக செல்வது உண்டு. அப்பொழுது, கருணாநிதியை, படிக்கட்டில், லிப்ட்டில் பார்த்து பேசியது உண்டு.
கருணாநிதியின் கல்லறை, அண்ணா அறிவு ஆலயத்தில், மவுண்ட் ரோட்டில் அமையட்டும்.
அண்ணா அறிவு ஆலயம்.
அண்ணா என்றால், அங்கு அனைவரும் அடக்கம்.
அந்த இடத்தையே, திராவிட அரசியல் வரலாறு சொல்லும் நிலமாக மாற வேண்டும்.
கட்சி அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாத்து.
பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா என்று அனைவரையும் அண்ணா அறிவு ஆலயத்துக்குள் கொண்டு வா.
யாரையும் விட்டு வைக்க வேண்டாம். கண்ணதாசன், சோ, மதுரை முத்து, பழனிவேல்ராஜன், பி.இராமமூர்த்தி.
மொதல்ல, புகைப்பட கண்காட்சி அமைக்கலாம். பிறகு, தொழில்நுட்பம் கொண்டு, வரலாற்றை மேம்படுத்தலாம்.
தமிழகம், உலக அரசியலுக்கு முன்னோடி.
Tamilnadu is an university for political science; we can educate the global citizens on politics. People from Ceylon, Burma, Singapore may come and learn political science from us.
ரஜினி, பொறந்த இடத்தில், ஆன்மிகம் கற்றுக் கொண்டார்.
புகுந்த வீட்டில், அரசியல் கற்றுக் கொண்டார்.
ரஜினி, கலைஞருக்கு கொடுத்த வாக்கையும் நிறைவேற்றி விட்டார்.
கலைஞரை எதிர்த்து, அரசியல் செய்யும் நிலை, ரஜினிக்கு ஏற்படவில்லை.
ஆக, ராஜாஜி ஹாலில் இருந்து, கருணாநிதியின் உடலை, தோளிலே சுமந்து வாங்க.
பெரிய பெரிய எந்திரம் தேவையில்லை. மனித சக்தியில், கல்லறை அமையட்டும்.
தமிழக மக்கள் அனைவரும் வருவாங்க.
ஒவ்வொருத்தர் கையிலேயும், மண் வெட்டி, கடப்பாரை கொடு.
அவுங்க, மொதல்ல, வேலி சுவரை உடைத்து அப்புறப்படுத்தட்டும்.
பிறகு, நிலத்தை தோண்டட்டும்.
எல்லோருக்கும் வாய்ப்பு கொடுங்க.
Let us build a ஆலயம் in Mount Road.
No comments:
Post a Comment