Sunday, September 2, 2018

Veera Samy Formula

எங்களிடம் 100 கோடி ரூபாய் இருந்தால்,
ஒரே வாரத்தில் அதிமுகவின் 10 எம்.எல்.ஏக்களை இழுத்துவிட முடியும்
என்று திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

ஒரு வாதத்திற்காக வைத்து கொள்வோம்,
ரூ.10 கோடி கொடுத்தால் ஒரு எம்.எல்.ஏ வெளியேறுகிறார் என்றால்
10 எம்.எல்.ஏக்களுக்கு 100 கோடி ரூபாய் தேவை.

ஆனால், அந்த ரூ100 கோடி எங்கு இருக்கிறது?
அப்படி இருந்தால் நிச்சயம் செய்து நான் காட்டுவேன்.

எம்.எல்.ஏக்களை இழுக்காமல் இருப்பதற்கு காரணம்,
ஸ்டாலின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்.
நாம் இன்று அப்படி செய்தால்,
நாளைக்கு அவர்கள் அதேபோல் செய்யக்கூடும் என்று நினைக்கிறார்.


கருணாநிதி உயிரோடு இருக்கும்வரை, ஆற்காடு வீராசாமி, பத்திரிக்கைகளிடம், நேரடியாக பேசியதில்லை. இதுவே, அவரது முதல் இண்டர்வீயூ ஆகும். கள்ளம், கபடம் அற்று, மனதில் உதித்த உண்மையை, அப்படியே வார்த்தையில் வெளிப்படுத்தி இருக்கின்றார், வீராசாமி அவர்கள்.

இண்டர்வீயூ எடுத்த நபர், மிகவும் இளையவர். அந்த தம்பி, ஒரு கணம், தடுமாறி போய்விட்டான். அவரால், நம்ப முடியவில்லை. பெரியவர் ஜோக் அடிக்கிறார் என்று நினைத்து, உறுதிப்படுத்துவதற்காக, மீண்டும் வினாவினார்.

ஆனால், ஆற்காடு வீராசாமி, தெள்ளத்தெளிவாக, எந்தவித தயக்கமும் இல்லாமல் பேசினார். அவர், இலாபம், நஷ்டம் என்று கணக்கு போட்டு, பேசவேண்டிய கட்டாயம், தற்பொழுது இல்லை. இன்றைக்கு, ஆற்காடு வீராசாமி, ஒரு சுதந்திர மனிதர்.

இன்றைக்கும், அன்பழகன்; ஒரு அன்பழகன் தான்; மற்றவர்கள், அன்பழகன் என்று பெயர் வைத்திருக்கலாம். ஆனால், அன்பு, பண்பு மிகுந்த, பொது வாழ்வில், ஓரளவுக்கு தூய்மையாக, நேர்மையாக சேவை ஆற்றமுடியும் என்று வாழ்ந்து காட்டுபவர், அன்பழகன்.

ஆக, இன்றைக்கும், அன்பழகன், இவ்வாறாக பேசமாட்டார்.

கருணாநிதிக்கு, ஒருபுறம் ஆற்காடு வீராசாமி; மறுபுறம் கோபால்சாமி என்று, இரு சாமிகளோடுதான், கருணாநிதி வலம் வருவார். ஆக, ஆற்காடு வீராசாமியின் வாக்கு, கருணாநிதியின் அரசியல் அனுபவம், ஞானம், இந்திய அரசியலின் உண்மை நிலையை வெளிப்படுத்துகின்றது.

அது, மறைந்த கருணாநிதியின் ஆன்மா பேசும் உண்மை.

ஆக, ஆற்காடு வீராசாமியின் வாக்கை, புறந்தள்ளிவிட முடியாது.

அண்ணாதுரை; நல்லவேளை உயிரோடு இல்லை. ஆற்காடு வீராசாமியின் அருள்வாக்கை, அண்ணாதுரை கேட்டு இருந்தால், தூக்குமாட்டி, தனது உயிரை மாய்த்து கொண்டு இருப்பார்.

ஈரோடு இராமசாமி, தனது கைத்தடியால், ஆற்காடு வீராசாமியை அடித்து இருப்பார்.

ஆனால், ஆற்காடு வீராசாமியின் அருள்வாக்கு, மெய்ப்பொருள் ஆனது. அதுதான் இந்திய அரசியலின் உண்மை நிலை.
Innovation in Indian Politics always happens in Tamil Nadu.

Thirumangalam Formula; Radha Krishna Nagar Formula; and now, Veera Samy Formula.

Yes, these are innovations.

Tamilnadu has always been leading the rest of India in innovations in politics.

As per Veera Samy Formula, the current market value of a Member of State Assembly is Ten Crores Indian Rupees. We need to confirm it with Arcot Veera Samy, whether it could be black or white.

In IPL, they bid players. Likewise, you could bid MLA and MP.

Could Arcot Veerasamy proposal be considered as Corruption or Contempt of the Indian Constitution.

But, it doesn't sound like illegal. Otherwise, Arcot Veerasamy would not suggest this proposal in the media.

But, Ambedkar would never agree with Arcot Veerasamy.

But, it is a practical thing. In the current political system, you could bid MLA and MP and capture the state or national authority.

You could apply Veera Samy formula, not only to Tamil Nadu; but also to all states in India; in fact, it could be applied to Lok Sabha too.

Lok Sabha has 500 plus MP; all you need is, investment for 300 plus MP.

With the current market value, a MP may cost you, One Million USD.
500 MP may cost you Five Hundred Million USD.
With Half a Billion, you could buy India.

Wal-Mart and Amazon would be interested in Veera Samy Proposal.

In fact, Amit Shah did try Veera Samy Formula for Yeddyurappa in Karnataka.
But it didn't go through smoothly.

So, the truth is, Indian Constitution has defects.
In fact, it is not on the Constitution; it is on the current society.

Greedy; Ambitious; No Value; Growth at any cost.

The current politicians do not have Mohandas Karamchand Gandhi value; they also do not have Nathuram Godse value.

That's the reason, the current Constitution is not suitable for current society.

That's the reason, Rajini says, the system has bugs; we cannot even fix all these bugs; we need to build a new system.

This generation expected Narendra Modi to fix these defects; but, because of Amit Shah, Narendra Modi has to become part of the current political system. Instead of fixing defects, Narendra Modi and Amit Shah protects the current political system.

No comments:

Post a Comment